தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு துறையினருக்கு அண்ணா பதக்கம்....தமிழ்நாடு அரசு ஆணை ... - Tamil Nadu Chief Minister MK Stalin order

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 14, 2022, 12:52 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் (செப்.15) ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவித்து வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு, காவல் துறையில் முதல் நிலை காவலரில் இருந்து காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் முன்னணி தீயணைப்பு வீரர் தொடங்கி துணை இயக்குநர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலரில் ஆரம்பித்து உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “ தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கர்நாடக கல்வி அறக்கட்டளை பள்ளியில் மாணவிகளை சாதிப் பெயரை சொல்லி திட்டுவதாக புகார்...

ABOUT THE AUTHOR

...view details