தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது சிறந்த நிர்வாகத்துக்கு விருதா? வைகோ காட்டம் - இடஒதுக்கீடு குறித்து வைகோ

சென்னை: தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

Vaiko latset
Vaiko latset

By

Published : Dec 28, 2019, 11:03 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்து உள்ளார். தமிழ்நாடு அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி விதிக்காமல், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் வஞ்சகம் செய்துள்ளது.

ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள பிபின் ராவத், இதுவரை எந்த ராணுவ தளபதியும் சொல்லாத அரசியல் கருத்தை சொல்வது ஆபத்தானது. ராணுவ தளபதி பேசியதை திரும்பப் பெற வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து மதிமுகவும் வழக்கு தொடர்ந்து உள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் முலமாகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகச் சீர்கேடு இங்கு இருக்கும்போது, இந்த அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்" என்றார்.

இதையும் படிங்க: ’மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை’ - திமுக எம்பி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details