தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கலைச்செம்மல் விருது தொகையினை ஒரு லட்சமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு!

சென்னை: ஓவியம், சிற்பக்கலைத் துறைகளின் மரபு வழி - நவீன பாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைச்செம்மல் விருது தொகையினை ஒரு லட்சமாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.

கலைச்செம்மல் விருது தொகையினை ஒரு லட்சமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு!
கலைச்செம்மல் விருது தொகையினை ஒரு லட்சமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு!

By

Published : Dec 31, 2020, 8:58 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (டிச.31) வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி அன்று கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி, மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை தமிழ்நாட்டில் ஓவியம், சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி (Traditional) - நவீனபாணி (Contemporary) கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைச்செம்மல் விருது தொகையினை ஐம்பது ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் விருதாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கலைச்செம்மல் விருது தொகையினை ஒரு லட்சமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு!

அதனடிப்படையில், ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளில் மரபு வழி ( Traditional ) மற்றும் நவீன பாணி ( Contemporary ) கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தொகை ரூபாய் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல, விருதாளர்களின் எண்ணிக்கையினை இரண்டிலிருந்து 6 ஆக உயர்த்தப்படும். ஒரு கலைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 6 கலைஞர்களுக்கு ஆறு லட்சம் ரூபாயும், விழாச் செலவினங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என ஆண்டொன்றுக்கு ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :அவக்கேடோ பழங்களில் நோய் தாக்கம் - விவசாயிகள் கவலை!

ABOUT THE AUTHOR

...view details