தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்... 314 பேருக்கு விருதுகள்... - chennai mayor priya

தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்பட விருதுகள் 160 பேருக்கும், சின்னத்திரை விருதுகள் 81 பேருக்கும் வழங்கப்பட்டது.

Etv Bharatதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
Etv Bharatதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

By

Published : Sep 5, 2022, 7:23 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன விருதுகள் வழங்கும் விழா நேற்று (செப்-4) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

வெள்ளித் திரைக்கு 5 பவுன்: திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வில் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரமும், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரமும் என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ. 26,25,000 (இருபத்தாறு லட்சத்து இருபதைந்தாயிரம்) காசோலை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்... 314 பேருக்கு விருதுகள்...

சின்னத்திரைக்கு 3 பவுன் தங்கம்:அதேபோல சின்னத்திரை விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் என்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குதலா ரூ. 1 லட்சம் என்றும் 20 பேருக்கு காசோலை வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் (2008-09 கல்வியாண்டு முதல் 2013-14 கல்வியாண்டு வரை) மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 1,50,000 காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:’உங்கள் படைப்புகளிலேயே இதுதான் சிறந்தது..!’ - ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறித்து ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details