தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
இளைஞர்களை வாக்களிக்கவைக்க முதன்மைத் தேர்தல் அலுவலர் செய்த சுவாரஸ்ய ட்வீட்...! - தேர்தல் 2019
சென்னை: இளைஞர்களை வாக்களிக்க வைக்கும் வகையில் தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அலுவலரின் ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான ட்வீட் ஒன்று வைரலாகிவருகிறது.
சிங்கில்ஸ் கமிடட்னு ஒருத்தவர் விடமாக எல்லோரும் வந்து ஓட்டு போடுங்க
3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 52.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல் மூலமாக முதல்தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால், அவர்களை கவரும் விதமாக தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அலுவலரின் ட்விட்டர் பக்கத்தில்,
சிங்கில்ஸ், கமிட்டட்னு அதாவது காதலிக்காதவர்கள், காதலிப்பவர்கள் என ஒருவர் விடாமல் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்வீட் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.