தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் அதிகரிப்பு - தேசிய ஆவண காப்பக தரவுகள்

ஐதராபாத்: தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

Tamil Nadu Crime at a glance Analysis 2017 - From RKC

By

Published : Oct 26, 2019, 2:00 AM IST


தேசிய ஆவண காப்பக தரவுகள் அண்மையில் வெளியானது. அதில் ஊழல் வழக்குகள் கடந்த 2016ஆம் ஆண்டை காட்டிலும் 2017ல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் இணையதள குற்றங்களும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. எனினும் மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. ஊழல் வழக்குகளை பொறுத்தமட்டில் கர்நாடகா 289 வழக்குகளுடன் தென்னிந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

குற்ற வகைகள் 2015 2016 2017
ஊழல் வழக்குகள் 204 170 257
பெண்களுக்கு எதிரான குற்றம் 5919 4463 5397
இணையதள குற்றங்கள் 142 144 228
ஆட் கடத்தல் 13 0.46 13
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் 1947 2895 2769
குற்ற வழக்குகள் 1,87,558 1,79,896 1,78,836

அதற்கு அடுத்த இடங்கள் முறையே ஆந்திரா, தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. ஊழல் வழக்குகளில் முன்னணியில் உள்ள தென்னிந்திய மாநிலங்கள் விவரம். (2017ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில்)

மாநிலங்கள் ஊழல் வழக்குகள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் அடிப்படையில் பகிர்வு விழுக்காடு
கர்நாடகா 289 7.1
ஆந்திரா 199 4.9
தமிழ்நாடு 257 6.3
கேரளா 142 3.5
தெலங்கானா 55 1.4

2017ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் 17,909 வழக்குகளுடன் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது. அதன் விவரம்

எண் எண்ணிக்கை மாநிலங்கள் அடிப்படையில் விழுக்காடு
கர்நாடகா 14,078 3.9
கேரளா 11,057 3.1
தமிழ்நாடு 5,397 1.5
தெலங்கானா 17,521 4.9
ஆந்திரா 17,909 5.0
மொத்தம் 65,962 18.4

இணையதள குற்றங்களும் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துள்ளன. தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் இணையதள குற்றங்கள் குறைவாக பதிவாகியுள்ளன. அதன் தரவுகளை (2017) காணலாம்.

மாநிலம் கு.எண்ணிக்கை பகிர்வு (நாடு முழுவதும்)
கர்நாடகா 3,174 14.6
தெலங்கானா 1,209 5.5
ஆந்திரா 931 4.3
கேரளா 320 1.5
தமிழ்நாடு 228 1.0
மொத்தம் 5,862 26.9

ஆள்கடத்தல் வழக்குகள் (2017ஆம் ஆண்டு தரவுகள்)

தென்னிந்தியாவிலேயே ஆள்கடத்தல் வழக்குகள் தெலங்கானாவில் அதிகமாக பதிவாகியுள்ளன.

மாநிலம் வழக்கு பகிர்வு
தெலங்கானா 329 11.53
ஆந்திரா 218 7.64
கேரளா 53 1.86
கர்நாடகா 31 1.09
தமிழ்நாடு 13 0.46
மொத்தம் 644 22.58

2017ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 373 வழக்குகள் பதிவாகியுள்ளன. 357 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. மூன்றாம் இடத்தில் 329 வழக்குகளுடன் தெலங்கானா உள்ளது.

அதிக குற்றங்கள் நடக்கும் மெட்ரோ நகரங்களில் சென்னை, கோவை இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்

நகரம் 2015 2016 2017
சென்னை 97,142 1,13,847 41,573
கோவை 9,896 10,205 11,762

தமிழ்நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு,1,87,558 (ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 558) குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது அது 1,78,836 (ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 836) ஆக குறைந்துள்ளது. தென்னிந்திய அளவில் பார்க்கும் போது அதிக குற்ற சம்பவங்கள் நடந்த மாநிலத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது. (2017 தரவுகளின் அடிப்படையில்)

மாநிலம் வழக்கு பகிர்வு (நாடு முழுவதும்)
கேரளா 2,35,846 7.7
தமிழ்நாடு 1,78,836 5.8
கர்நாடகா 1,46,354 4.8
ஆந்திரா 1,32,336 4.3
தெலங்கானா 1,19,858 3.9
மொத்தம் 8,13,230 26.5

ஊழல் வழக்குகளில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு 925 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த மாநிலங்களின் அடிப்படையில் பார்க்கும் போது 22.8 விழுக்காடு பங்களிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நிதிஷ் குமார் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, கொலை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details