சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர்த்தில் 2,812 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,154 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 48 ஆயிரத்து 419ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 904ஆகவும் அதிகரித்துள்ளது.