சென்னை:Today Corono update: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 12,895 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்பினால் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 51ஆயிரத்து 335ஆக உயர்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது
கரோனா தொற்று
மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த 27 ஆயிரத்து 81 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 405 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில், 246 நபர்களுக்கு எஸ்.ஜீன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்று
வெளிநாடுகளிலிருந்து வந்த 117 நபர்களுக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 68 நபர்கள் என 185 நபர்கள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிகிச்சைப்பெற்ற 179 நபர்களும் 21 மாவட்டங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 6 நபர்களும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தொற்று எண்ணிக்கை 12,895ஆக உயர்வு
தமிழ்நாட்டில் புதிதாக மேலும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 705 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 12,843 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 8 நபர்களுக்கும், ஓமன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் தலா ஒரு நபர்களுக்கும், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலிருந்து வந்த 4 பேருக்கும் என 12,895 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 75 லட்சத்து 85 ஆயிரத்து 162 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், 28 லட்சத்து 286 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 51 ஆயிரத்து 335 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1,808 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.