சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5ஆம் தேதி, மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் - சென்னை செய்திகள்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
வழக்கமாக நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நிதி நிலை தாக்கல் செய்த மறு நாள் அதாவது 19ஆம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:'நான் பாசிஸ்ட்டா... மனது வலிக்கிறது' - மரணமடைந்த ரஷ்ய வீரர் தாயிற்கு எழுதிய குறுஞ்செய்தி