தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் சூதாட்டத்தை தடை  செய்ய அவசரச் சட்டம்.... தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்... - TN Governor RN Ravi

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 8:30 PM IST

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க, புதிய அவசர சட்டம் இயற்ற தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைசார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் கடந்த 10.06.2022 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ஆன்லைன் சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று (செப்.26) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது. பின் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க கோரிக்கை - உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

ABOUT THE AUTHOR

...view details