சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே. நாகராஜ், விவசாயத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி மானியங்களை விவசாயி இல்லாத நபர்கள் அரசு அலுவலர்களின் உதவியோடு பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், " தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், கூட்டு பண்ணை திட்டம், விவசாயிகளுக்கு நிதி வழங்க கூடிய அனைத்து திட்டங்களிலும் விவசாயி இல்லாத நபர்கள் அரசு அலுவலர்களின் உதவியோடு பயன்படுத்தி வருகிறார்கள் என குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, இதுவரை நிதி மானியம் வழங்கிய அனைத்து திட்டங்களையும் மாவட்ட வாரியாகக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் உள்ளது.