தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் (exit poll) கருத்துக்கணிப்பை ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் திமுக கூட்டணி 162 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 58 முதல் 68 இடங்களை கைப்பற்றும் எனவும், அமமுக 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கைப்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இதேபோல், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி 175 முதல் 195 இடங்களிலும், அதிமுக கூட்டணி 38 முதல் 54 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி இரு இடங்களிலும், அமமுக கூட்டணி 1 முதல் 2 இடங்களை கைப்பற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி 166 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமமுமு கூட்டணி ஒரு இடத்திலும், மற்றவைக்கு 8 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு