தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செய்தியாளரை தாக்கிய தாசில்தார்...போலீஸ் விசாரணை... - DP Chatram police investigation

சென்னையில் பட்டா மாறுதல் தொடர்பாக முறையாக பதில் அளிக்காத தாசில்தார், வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளரை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 15, 2022, 7:45 AM IST

சென்னை: சென்னை தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் பாரதிராஜா(42). இவர் தனது மனைவி லலிதாவுடன் சென்னை அயனாவரம் பாளையக்காரர் தெருவில் வசித்து வருகிறார்.

பாரதிராஜா அவரது மனைவி லலிதாவின் சொத்தின் ஒரு பகுதியை, கடந்த 2014 ஆம் ஆண்டு செல்வராஜ் என்பவருக்கு விற்று உள்ளார். அதில் 60 அடி பொது வழி இருந்து உள்ளது. ஆனால், சொத்தை வாங்கிய செல்வராஜ் 60 அடி பொது வழியையும் சேர்த்து அயனாவரம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பட்டா வாங்கியுள்ளார்.

செய்தியாளரை தாக்கிய தாசில்தார்

இதையறிந்த பாரதிராஜா உடனே அயனாவரம் தாசில்தாரிடம் சென்று விவரம் கேட்டுள்ளார். இதற்கு தாசில்தார் முறையாக பதிலளிக்காமல் பாரதிராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் காயமடைந்த பாரதிராஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக பாரதிராஜா டிபி சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"நீங்கள் ஒருவரைத் தாக்கினால், நாங்கள் இருவரைத் தாக்குவோம்" - திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details