தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2022, 8:01 PM IST

ETV Bharat / city

சூர்யா 42 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூர்யா 42’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு
படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் சிவா, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1, 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். குறிப்பாக இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. கோவாவில் நடந்து வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:''காதல்னு வந்துட்டா...” ; வெளியானது இயக்குநர் ராமின் புதிய படத்தின் டைட்டில் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details