சென்னை: சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பல பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு எனவும் யாரும் விளையாட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோசடி நடந்து வருவதாகவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிக்கிற போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.