தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜனவரி 1 முதல் 3 வரை கூடுதல் புறநகர் ரயில் சேவை - சென்னை புறநகர் ரயில் சேவை

சென்னை: வரும் 2021 ஜனவரி, 1,2, 3 ஆகிய தேதிகளில் புறநகர் சிறப்பு ரயில்கள் வழக்கமாக வார நாள்களில் பின்பற்றப்படும் கால அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Chennai sub urban train
சென்னை புறநகர் ரயில்

By

Published : Dec 31, 2020, 6:05 AM IST

சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்பவாறு வார நாள்களில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டுவருகின்றன.

வருமாண்டு 2021 ஜனவரி 1, 2, 3ஆம் தேதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு நாள், சனி, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாள்கள் தொடர் விடுமுறைவருகின்றன. பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மேற்கூறிய நாள்களில் தங்களது அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இதையடுத்து இந்த நாள்களில் புறநகர் சிறப்பு ரயில்கள், வழக்கமாக வார நாள்களில் பின்பற்றப்படும் கால அட்டவணையைப் பின்பற்றியே இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள தொடர் விடுமுறை நாள்களில் அதிகமானோர் பயணம் மேற்கொள்வர் என்பதால், கூட்ட நெரிசலைக் குறைக்கும்விதமாக 410 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகை சித்ரா வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் - முதலமைச்சர் தனிப்பிரிவில் பெற்றோர் மனு

ABOUT THE AUTHOR

...view details