சென்னை: "புதுமைப் பெண்" திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர்கள் ஸ்டாலின் மற்றும் கெஜ்ரிவால் வர இருந்த நிலையில், அவர்களை வரவேற்க மாணவிகளை காலை முதலே காக்க வைத்துள்ளனர்.
பாரதி மகளிர் கல்லூரியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்னிலையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ் "புதுமைப் பெண்" திட்டத்தையும் மற்றும் 26 "தகைசால் பள்ளிகள்", 15 "மாதிரிப் பள்ளிகள்" ஆகிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.
பாரதி கலைக் கல்லூரி அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் வரிசையாக நின்று முதலமைச்சர்களை வரவேற்றனர். இதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக வந்து காத்திருந்தனர்.
முதலமைச்சர்களை வரவேற்பதற்காக மாணவிகளை காலை முதலே காக்க வைத்த அவலம்! மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவிகளுக்கு தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தராமல், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...