தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதது ஏன்? - Student admission

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று (ஆக. 23) மாணவர்கள் சேர்க்கை அறிவித்திருந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதது ஏன்
அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதது ஏன்

By

Published : Aug 23, 2021, 12:21 PM IST

Updated : Aug 23, 2021, 12:57 PM IST

சென்னை:தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் (ஆக. 23) செப்டம்பர் ஒன்றாம் தேதிவரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஏமாற்றத்தில் மாணவர்கள்

தமிழ்நாட்டிலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன.

அதனடிப்படையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரி கல்வி இயக்குநரகம் மூலம் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மாணவர்கள்

இந்நிலையில், சென்னையில் கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் தகவல் பலகையில் வெளியிடாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

பெற்றோர்கள் வருத்தம்

மேலும், தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என காயிதே மில்லத் கல்லூரியில், மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் தேதி, நேரம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் அங்கிருந்த கல்லூரி காவலாளி தெரிவித்தார். இதனால் மாணவர்கள் முதல்வரையும் சந்திக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கல்லூரி கல்வி இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்பட்டுவந்த இணையதளம் கடந்த மூன்று நாள்களாக முடங்கி உள்ளது என பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கு வந்த மாணவி சரண்யா கூறுகையில், "தான் தொடர்ந்து கல்லூரிக்குவந்து பார்த்து செல்கிறேன். எப்பொழுது சேர்க்கை நடைபெறும் என்பது குறித்த தகவலை கல்லூரி நிர்வாகம் தெளிவாகக் கூறவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது நடைபெறும் என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை'

Last Updated : Aug 23, 2021, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details