சென்னை ஐஐடியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திப் என்பவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சென்று பேராசிரியர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டார்.
'சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்' - chennai iit student suicide
சென்னை: ஐஐடியில் மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஐஐடியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்ட வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றிருப்பதாகவும் இந்த வழக்கை விசாரிக்க புலன் விசாரணை அலுவலராக கூடுதல் துணை ஆணையர் மெகலினா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் குழுவில், சிபிஐயில் பணியாற்றிய உதவி ஆணையர் பிரபாகரன், கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் விசாரணை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்கொலைக்கான உண்மைத்தன்மையை விசாரிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறினார்.
TAGGED:
chennai iit student suicide