தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கையளவு செயற்கைக்கோள்களை உருவாக்கி மாணவர்கள் சாதனை! - நாசா

சென்னை: மதுரவாயலில் நடைபெற்ற விண்வெளி விஞ்ஞானத் திறன் போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கையளவு செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளனர்.

research
research

By

Published : Jan 25, 2021, 8:17 PM IST

மதுரவாயலில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி விஞ்ஞானத் திறன் போட்டி நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றை பயன்படுத்தி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 800 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 1000 மாணவர்களை கொண்டு, 100 ஃபெம்டோ எனும் கையடக்க செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செயற்கைக்கோளும் தனித்தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. மழை அளவு, காற்றின் நிலை, கடல் சீற்றம் உள்ளிட்டவற்றை கண்டறியும் கண்டுபிடிப்புகளை மாணவர்களே உருவாக்கி வருகின்றனர். இந்த செயற்கைக்கோள்கள் வரும் 7 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. மேலும், இந்நிகழ்வு கின்னஸ் புத்தகத்திலும், ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பெறவுள்ளது. இதில் சிறந்த படைப்புகளை நாசா மூலம் விண்ணில் செலுத்த முயற்சி செய்யவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கையளவு செயற்கைக்கோள் வடிவமைத்த பள்ளி மாணவர்கள்

இதையும் படிங்க:தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details