தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை' - உணவக விதிமுறைகள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், விருந்து அரங்கங்கள் அனைத்தும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

Tamil Nadu Pollution Control Board
Tamil Nadu Pollution Control Board

By

Published : Sep 6, 2020, 4:20 PM IST

கரோனா சூழலில், திருமண மண்டபங்கள், உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், விருந்து அரங்கங்களுக்கு சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து ஜூலை 23ஆம் தேதி பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதனை மேற்கோள்காட்டி இன்று (செப்டம்பர் 6) தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "திருமண மண்டபங்கள் உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், விருந்து அரங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளாக தேசிய பசுமை தீர்ப்பாயம்,

  • நீர் பயன்பாட்டில் சிக்கனம்
  • திட மற்றும் திரவக் கழிவுகளை மேலாண்மை செய்தல்
  • மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
  • ஒழுங்கமைப்பு மற்றும் கட்டுப்பாடு
  • வாகனங்கள் நிறுத்துவதற்கான போதுமான இடவசதி
  • டீசல் ஜெனரேட்டர்கள் சக்திக்குத் தகுந்த உயரமான புகை போக்கிகள் அமைத்தல் உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடரவும், சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை வசூலிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோழிப்பண்ணை விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details