கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் பணிகளை மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம், சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவுகள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டதால், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவின்படி, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த இடைக்கால உத்தரவுகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கடந்த விசாரணையில் உத்தரவிட்டது.