இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் இறுதி வாக்காளர் பட்டியலை 2020 பிப்ரவரி 14ஆம் தேதியன்று வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது.
ஜனவரியில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்! - வாக்காளர் பட்டியல்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கல் சிறப்பு முகாம்கள் நடத்த அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
election
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வாக்களித்த பின் ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிரடி