திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் உயர்த்தியது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவுச் செய்துள்ளார். அதில், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான "சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் உயர்வு: ஸ்டாலின் கண்டனம் - டூவிட்
சென்னை: சிபிஎஸ்இ தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டது கண்டனத்திற்குரியது என மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
mk stalin
நீட், தேசிய நிறைவுநிலைத் தேர்வு (நெக்ஸ்ட்), புதிய கல்விக் கொள்கை வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி, சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக அரசின் இந்தப் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
Last Updated : Aug 13, 2019, 1:54 PM IST