மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, விவசாய விளைநிலங்களில் வேலை பார்த்து வந்த பெண்களை சந்தித்து அவர்களது குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். கரோனா பரிசோதனை மேற்கொண்ட 100 பேர் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், "மத்திய மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளை வஞ்சிக்கின்றன. தன்னை ஏழை தாயின் மகன் என்று கூறும் மோடி, அனைவரையும் ஏழையாக்கி வருகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா, கர்நாடகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிக்கு எதிரான சட்டத்திற்கு அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் ஆதரவு கொடுத்துள்ளது.