தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 100 விழுக்காடு தேர்ச்சி! - tamilnadu sslc

sslc-results-tamilnadu
sslc-results-tamilnadu

By

Published : Aug 10, 2020, 9:32 AM IST

Updated : Aug 10, 2020, 11:44 AM IST

09:30 August 10

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. 100 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா நெருக்கடி காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேரும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 மாணவிகளும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 மாணவர்களும் அடங்குவர். அதனடிப்படையில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவ, மாணவிகள் 100 விழுக்காடு  தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 6 ஆயிரத்து 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்களின் விவரம் பின்வருமாறு: 

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in.

மறுகூட்டல்

மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, பயின்ற பள்ளியின் மூலமாக குறைதீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அரசு தேர்வுத் துறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:சென்னை-அந்தமான் கண்ணாடி இழை கேபிள் திட்டம் இன்று தொடக்கம்!

Last Updated : Aug 10, 2020, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details