தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சி - கமல்ஹாசன் நெகிழ்ச்சி - கமல்ஹாசன் பிறந்தநாள் குடும்பம்

சென்னை: தன் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கழித்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamal

By

Published : Nov 7, 2019, 10:46 PM IST

தனது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் சென்றதாகவும் தெரிவித்தார்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆன்லைன் வர்த்தகம் விளம்பர விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிக்கியது எதிர்பாராதது எனவும், இனிவரும் காலங்களில் அது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

கமல்ஹாசன் பேட்டி

நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையின்மை பிரச்னை, கடன் அதிகரிப்பு போன்ற சிக்கல்களை தீர்க்க நாம் தான் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கருவறையில் உருவாகி ஆய்வறையில் வளர்ந்த ஆண்டவர்!

ABOUT THE AUTHOR

...view details