தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு - Appointed 4 people to monitor the oxygen supply

ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு - 4 பேர் நியமனம்
ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு - 4 பேர் நியமனம்

By

Published : May 20, 2021, 3:15 PM IST

Updated : May 20, 2021, 4:54 PM IST

15:11 May 20

சென்னை: ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க நான்கு பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.  

மாவட்டம் தோறும் கரோனா சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தியுள்ளது.  அதுமட்டுமின்றி ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை அறிந்து கொள்ள 'findabed' செயலியை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் அனைவருக்கும் கிடைப்பதை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நாடு முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் மருத்துவ குழு கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு  உள்ளிட்டவற்றை கண்காணிக்க சிறப்பு இணை பணிக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

மருத்துவ  ஆக்ஸிஜன் ஒதுக்கீடு, விநியோகம் செய்யவதை கண்காணிக்க தரேஸ் அகமது தலைமையில் நான்கு நபர்கள் கொண்ட உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சூரப்பா மீதான அறிக்கை: அரசிடம் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

Last Updated : May 20, 2021, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details