தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

24/7  இலவச வைஃபை வழங்கும் மாநகராட்சி பூங்கா: குஷியான பொதுமக்கள்!

சென்னை: நடைபயிற்சி செய்வோருக்கு உடற்தகுதியையும், முதியோருக்கு ஓய்வையும், இளைஞர்களுக்கு ஆனந்தத்தையும் அளித்து வரும் பூங்காக்கள் இப்போது வைஃபை வசதியையும் சேர்த்து வழங்குகிறது. அதுவும் இலவசமாக. இதனால் எப்போதையும்விட பூங்காவிற்கு வருவோர் கூடுதல் உற்சாகத்துடன் வருகின்றனர். எங்கிருக்கிறது அந்த வைஃபை பூங்கா. இப்போது பார்ப்போம்...

park
park

By

Published : Mar 7, 2020, 11:41 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட லஸ் நிழற்சாலை பகுதியில் அமைந்துள்ளது நாகேஸ்வர ராவ் பூங்கா. ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா ஒரு சோலை வனம் போல் பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் இப்பூங்கா, அப்பகுதி மக்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும் இடமாக விளங்குகிறது. இதில் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக மாநகராட்சியால் இலவச ’வைஃபை’ இணையதளச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த Wi-Fi Hotspot வசதியானது இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும் வகையிலும், ஒவ்வொருவருக்கும் 45 நிமிடங்களுக்கு 20 Mbps வேகத்துடன் தடையில்லாமல் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட உள்ளது. இப்பூங்காவில் உள்ள 8 தூண்களில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை ஹாட்ஸ்பாட் இணைய வசதியில், ஒரு தூணில் உள்ள இணைய வசதியை 250 நபர்கள் முதல் 350 நபர்கள் வரை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் சமூக வலைதளங்கள், இணையதளச் சேவைகளை இலவசமாக தங்கள் கைப்பேசிகளில் பெறமுடியும்.

மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவைத் தொடர்ந்து, தியாகராய நகர் நடேசன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, இந்திரா நகரில் உள்ள பூங்கா ஆகியவற்றிலும் இலவச வைஃபை இணைய சேவைகள் தொடங்கப்பட உள்ளன. பூங்காக்களுக்கு அமைதி வேண்டியும், நடைபயிற்சி செய்யவும், குழந்தைகளுடன் பொழுதை போக்கவும் வரும் மக்களிடம் மாநகராட்சியின் இந்தச் செயல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த இலவச வைஃபை இணைய சேவையை முதலில் பெற்றுள்ளதால் மயிலாப்பூர் பகுதி மக்கள் குஷியாகியுள்ளனர்.

இலவச 24/7 வைஃபை வழங்கும் மாநகராட்சி பூங்கா; குஷியான பொதுமக்கள்!

இதையும் படிங்க: 'பள்ளிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு குழந்தைகள் செல்லும் நிலை வரலாம்' - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்

ABOUT THE AUTHOR

...view details