சென்னை: ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்த ஆணையைத் தமிழ்நாடு உள்துறைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
காத்திருப்பு பட்டியலில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்! - beela rajesh hsuband
பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் பாதுகாப்புப் பணியின்போது பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, இப்புகாரை விசாரிக்க ஐ.ஏ.எஸ் அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்தார்.
இச்சூழலில், டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் குறித்தும், அலுவலர்களின் இடமாற்றம் குறித்தும் தமிழ்நாடு உள்துறை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். அதில்,
- லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சிறப்பு டிஜிபி பொறுப்பிலிருந்த இப்பதவி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபி கரன் சின்ஹா மாற்றப்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு டிஜிபி ஷகில் அக்தர் மாற்றப்பட்டு காவலர் பயிற்சிக் கல்லூரி சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் கயல்விழி மாற்றப்பட்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.