சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சிறு குறு தொழில் ஆகியவற்றின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (செப். 2) நடைபெற்று வருகிறது.
அப்போது, பொது சொத்துகளை தனியார்மயமாக்குவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை கொண்டு வந்தார்.
பட்டியலில் ஊட்டி ரயில்
இதற்கு, பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,"பிபிபி (Public–Private Partnership) அதாவது பொது சொத்துகள் ஒன்றிய அரசு தனியார்மயமாக்குவது குறித்த கொள்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள்போல் தமிழ்நாட்டிலும் சாலைகள், ஊட்டி ரயில் பகுதிகள் என பல்வேறு பொது சொத்துக்களை தனியார் மயமாக்குவதற்கு ஒன்றிய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் போக்குவரத்து நாட்டுடமை ஆக்கப்பட்டது.