சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 9ஆவது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சரின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் இதுவரை ரூ. 7,662 கோடி மத்திய மாநில அரசுகளால் நிதி விடுவிக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 1750 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை நிதிபெறப்படும். வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 9,200 கோடி அளவிற்கு 2020-2021ஆம் நிதியாண்டிற்கு மத்திய அரசிடமிருந்து நிதி பெறப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.