தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய 'சூரரைப் போற்று' - Actor Suriya

சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'சூரரைப் போற்று' திரைப்படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சர்வதேச திரைப்பட விழா
சர்வதேச திரைப்பட விழா

By

Published : Feb 22, 2021, 9:00 AM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கரோனா காரணமாக கடந்த தீபாவளிக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய 'சூரரைப் போற்று'

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் நேற்று (பிப்.21) திரையிடப்பட்டது.

சத்யம் திரையரங்கில் உள்ள அரங்கத்தில் படத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிய அரங்கில் இப்படம் திரையிடப்பட்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இன்று (பிப். 22) மீண்டும் ஒரு காட்சியை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இப்படம் நூறாவது நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details