தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தல் - 174 பேர் கைது - 174 பேர் கைது

ஒரு வார காலத்தில் சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசியை கடத்திய 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Smuggling of ration rice
Smuggling of ration rice

By

Published : Sep 19, 2022, 10:29 PM IST

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி 05.09.2022 முதல் 11.09.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற
27,21,603 ரூபாய், 4813 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 174 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதையும் படிங்க:வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழு பழங்கால உலோகச்சிலைகள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details