சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, உதயநிதி ஸ்டாலின், சிவாங்கி, ராஜூ, பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் :தமிழ் சினிமாவில் உண்மையான டான் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். ரெண்டு டான் இருக்கிறார்கள் சிவா மற்றும் அனிருத் இருவரும்தான். 10 நாட்களுக்கு முன்பு இந்த படம் எனக்கு காட்டினார்கள். டாக்டர் படத்தை விட டான் பெரிய படமாக வெற்றி பெறும். கடைசி அரை மணி நேரத்தில் சமுத்திரக்கனி சிறப்பாக செய்துள்ளார்.
லைகா நிறைய படங்களை எடுக்க வேண்டும் அதை எங்களுக்கே (ரெட் ஜெயன்ட்) கொடுக்க வேண்டும்.
எஸ்ஜே.சூர்யா :டான் திரைப்படம் தான் ரசிகர்களுக்கு ரியல் சம்மர் ட்ரீட். சிபி சக்கரவர்த்தி மிகச் சிறந்த இயக்குனர். தனது சக்திக்கு மீறி உழைப்பை கொடுப்பவர் சிவகார்த்திகேயன். அதுதான் அவரது வெற்றிக்கு காரணம். டான் எல்லோரையும் உணரவைக்கும் படமாக இருக்கும். பார்க்க கல்லூரி மாணவர் போல் இருந்தாலும் அனுபவமிக்க அரசியல்வாதியாக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.