சென்னை:தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை, அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய முன்னேற்றக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சிவா பேசுகையில், 'டிஜிபி-யின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காவல் துறை இல்லை என்றும் அவர், சைக்கிளில் செல்லவும் செல்ஃபி எடுப்பதற்குமா டிஜிபி என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தேசிய முன்னேற்றக் கழகத்தினர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேசிய தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், 'தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக, இது போன்ற தவறான செயலை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்து வருகிறார்கள்.