சென்னை ஆவடியில் உள்ள சிலம்பப் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு வகையான சிலம்பம், வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற தற்காப்பு கலைகள் கற்றுத்தரப்படுகிறது.
பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி! - சிலம்ப பயிற்சி
சென்னை: சென்னையில் சிலம்பம், மான்கொம்பு, வாள்வீச்சு போன்ற கலைகளுக்கான பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகிறது என்று சிலம்ப பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
silambam
இது குறித்து போதி தர்மர் சிலம்ப பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் கூறுகையில், “இங்கு பெண்களுக்கு அனைத்து விதமான பயிற்சிகளும் சிறந்த முறையில் கற்றுத் தரப்படுகிறது. அனைத்து தமிழ்நாடு அளவிலான போட்டிகளில் தங்கள் மையத்தில் பயிற்சி பெறும் மாணவிகள் வெற்றிப் பெற்று உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சிறந்த பயிற்சி மையமாக தங்களது மையம் திகழ்கிறது” என்றார்.