தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

என்னை மிரட்டியவர்களெல்லாம் 'சௌகிதார்' ஆகியிருக்கிறார்கள்: நடிகர் சித்தார்த் - சித்தார்த்

சென்னை: தன்னை மிரட்டியவர்களெல்லாம் தற்போது 'சௌகிதார்' ஆகியிருக்கிறார்கள் என நடிகர் சித்தார் ட்வீட் செய்துள்ளார்.

actor

By

Published : Mar 20, 2019, 10:41 AM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜக தனது தேர்தல் பணிகளை சமூக வலைதளங்களில் இருந்து தொடங்கியுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' என்ற சொல்லை இணைத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு பாஜக தலைவர்கள் என பாஜகவினர் ட்விட்டரில் தங்களது பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' என்ற சொல்லை சேர்த்துக்கொண்டனர். சௌகிதார் என்றால் 'பாதுகாவலன்' என்று பொருள்படும்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் தேவைப்படும்போது எல்லாம் பெரிய கட்சிகளுக்கு எதிராக பேசியுள்ளேன். ஆனால் ஒரு கூட்டத்தினர் மட்டுமே என்னை வெறுத்து, மிரட்டி, தவறாக பேசி இழிவுபடுத்தி வந்துள்ளனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் சௌகிதார் எனக்கூறிக் கொள்கின்றனர். பாஜக தொழில்நுட்பப் பிரிவு என்னைப் பற்றி பரப்பும் போலி செய்திகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ரஃபேல் விவகாரத்திலும், புல்வாமா விவகாரத்திலும் நடிகர் சித்தார்த் பாஜகவை விமர்சித்ததும், அதற்கு சித்தார்த்தை பாஜகவினர் கடுமையாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details