தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹாலிவுட் திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்த சித்தார்த்! - actor siddharth

ஹாலிவுட் திரைப்படமான ’தி லயன் கிங்’ படத்தின் சிம்பா கதாபாத்திரத்திற்கு தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்.

siddharth

By

Published : Jun 26, 2019, 7:51 AM IST

’அயன் மேன்’, ’தி ஜங்கிள் புக்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் அனிமேஷனில் உருவாகியுள்ள, ’டிஸ்னி தி லயன் கிங்’ சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

’தி லயன் கிங்’ ஹாலிவுட் திரைப்படத்தின் சிம்பா கதாபாத்திரம் தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக உள்ளது, இதற்கு தமிழில் நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்

இது குறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில்,

"லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என தெரிவித்தார்.

இந்த திரைப்படம் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details