தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவை குணப்படுத்துமா சித்த மருத்துவம்? - நிபுணர் குழு முடிவு தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: கரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் எனக் கூறப்படுவதை சிறப்பு நிபுணர்கள் குழு ஒரு மாதத்தில் பரிசீலித்து முடிவை அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : May 12, 2020, 6:20 PM IST

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து, ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வசந்தகுமார், கரோனாவுக்கு இதுவரை மருந்தோ? தடுப்பு மருந்துகளோ? கண்டுபிடிக்காத நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட தயாராக இருப்பதாகவும், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும் எனவும் வாதிட்டார்.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா? என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மூலிகையை பரிசீலிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு விண்ணப்பிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை நிபுணர் குழு பரிசீலித்து மூலிகைக் கலவை குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும், அந்த மருந்தை ஆய்வக பரிசோதனை செய்து, ஒரு மாத காலத்திற்குள் அதன் முடிவை மனுதாரருக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்கள் நேரடி கொள்முதல் - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details