தமிழ்நாடு சட்டசபை வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள சட்டபேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் படை உள்ளிட்ட கட்சிகள் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம்.
அதை அவர் ஏற்றுக்கொள்ளாததால் தற்போது நாங்கள் மக்கள் மன்றத்தை நாடியுள்ளோம். சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து பெரும்பாலான மக்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக வருபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாங்கள் இங்கு இருந்து செல்கின்றோம்.