தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சமூக நலத்துறைச் செயலர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு’ - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தித் தரக்கோரிய வழக்கில் சமூக நலத்துறைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

peoples
peoples

By

Published : Feb 11, 2020, 3:56 PM IST

டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலை ஓரங்களில் வசிக்கும், வீடுகள் இல்லாத மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவதாகக் கூறி, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறைச் செயலர் மதுமதி சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ’சுவதார் க்ரே’ திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தங்குவதற்கு சமூகநலத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதாகவும், குடும்பத்தைப் பிரிந்து வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு ஏதுவாக அவர்களுக்கென தனி விடுதி நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையோரம் வசிக்கும் மக்கள், சென்னை

மேலும், சிறார் சீர்திருத்தச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரத்து 112 குழந்தைகள் காப்பகங்களை, சமூகநலத் துறை கண்காணித்து வருவதாகவும், 36 காப்பகங்களை அரசு நேரடியாக நடத்திவருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி என்.ஜி.ஓக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளுக்காக, மாதம் 2 ஆயிரத்து 160 ரூபாய் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்றைய தினம், சமூக நலத்துறைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்களுக்கு மாவட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details