சென்னைமாநகராட்சியில் 45ஆவது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரில் உள்ள மார்க்கெட் அருகில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் செடிகளும், குப்பைகளும் நிரம்பி புதர் மண்டிப் போய் உள்ளது எனவும்; இதனால் கொசுக்கள் தொல்லை அதிகளவில் உள்ளது எனவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநகராட்சி தேர்தல் முடிந்து மாமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு மாதங்கள் பல ஆகிவிட்டன. ஆனால் இங்கே வெற்றி பெற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரான கோபிநாத் ஒரு நாள் கூட, இந்தப் பகுதிக்கு வருகை தந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தோ, இதுபோன்ற கழிவுநீர் கால்வாய்களை பார்வையிட்டோ, அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையோ எடுக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றினர்.