தண்டையார்பேட்டை இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் வேலு. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஓசி பகுதியில் தனது நண்பர்களுடன் நேற்றிரவு பேசிக்கொண்டிருந்தார். அப்போது வேலுவிற்கும் அவரது நண்பர் தினேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மோதல் முற்றியதையடுத்து, தினேஷ் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து, வேலுவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து - 7 பேர் கைது - மோதல்
சென்னை: வாக்குவாதம் முற்றியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலுவை அங்கிருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் ஆர்.கே.நகர் காவல்துறையினர், தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கணேஷ், மணிகண்டன், அசோக், குமார், பிரவீன், அப்பு ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: லேப்டாப் சர்வீஸ் சென்டரில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு