தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செப்டம்பர்-18 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Sep 18, 2021, 7:20 AM IST

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் இன்று பதவியேற்பு

தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல் படிப்பில் இட ஒதுக்கீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வில், இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான ஆணையை வழங்குவார் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

பாஜக செயற்குழுக் கூட்டம்

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, தாவணகரேவில் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் இன்றுமுதல் இரண்டு நாள்கள் நடக்கிறது.

பாஜக செயற்குழுக் கூட்டம்

வணிகவியல் தேர்வுகள் இன்றுமுதல் தொடக்கம்

தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்றுமுதல் நடைபெறும் எனத் தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

வணிகவியல் தேர்வு

சிம்புவின் அடுத்த படத்தோட லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் 48ஆவது படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிம்பு பட அப்டேட்

பெட்ரோல், டீசல் விலை

தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாயாகவும், டீசல் லிட்டர் 93.26 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடிய பகுதிகள்

தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ABOUT THE AUTHOR

...view details