தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீனு ராமசாமியின் இடி முழக்கம்! - Vijay Sethupathi Tweet

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் படத்திற்கு 'இடி முழக்கம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராமசாமியின் இடி முழக்கம்
ராமசாமியின் இடி முழக்கம்

By

Published : Aug 11, 2021, 9:10 PM IST

கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பிறகு தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

சீனு ராமசாமியின் இடி முழக்கம்

த்ரில்லர் படம்

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ்குமார், காயத்ரி நடிப்பில் புதிய படத்தை இவர் இயக்கி வருகிறார். ஆக்ஷன் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரித்துள்ளார். வைரமுத்து பாடல் எழுத ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு 'இடி முழக்கம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: '‘பீஸ்ட்’ படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் கொண்டாட்டம்'

ABOUT THE AUTHOR

...view details