தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதா பிறந்த நாள் விழா - சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனு! - சேவல் சண்டை

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளையொட்டி, சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 10, 2020, 3:58 PM IST

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது. ஆனால், சேவல் சண்டைக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1ஆம் தேதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களாம்பாக்கம் கிராமத்தில், சேவல் சண்டை நடத்த அனுமதியளிக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த ஆண்டு சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவல் சண்டை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, சேவல் சண்டைக்கு அனுமதியும், காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும், திருவாலங்காடு ஆய்வாளருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: தேர்வு முறைகேடு - அதிகரிக்கும் கைது எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details