சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் 144 தடை உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ”144 தடை உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைத்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களை 1 மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்தே பொருள்களை விற்கவேண்டும்.
சமூக இடைவெளியில் மக்களை நிறுத்தி பொருள்களை விற்காத கடைகளுக்கு சீல்! - சமூக இடைவெளியில் மக்களை நிறுத்தி பொருள்களை விற்காத கடைகளுக்கு சீல்
சென்னை: ஊரடங்கின்போது கடைகளில் பொதுமக்களை சமூக இடைவெளியில் நிறுத்தி பொருள்களை விற்கவில்லை என்றால் அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
Sealed for shops that do not adhere to the social distance
சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்கு வருவாய்த் துறை சார்பில் சீல் வைக்கப்படும். மேலும் இதுவரை அவ்வாறு பின்பற்றாத 400 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் சென்னையில் உள்ள வருவாய்த் துறைக்கு அலுவலகத்திற்கு 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:மதுரைக்கு வந்த வெளிநாட்டவருக்கு கரோனா அறிகுறி: மருத்துவமனையில் சிகிச்சை
TAGGED:
ஆர்.பி. உதயகுமார்