தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்! - crime news

சென்னை: வண்ணாரப்பேட்டையில் சிறுமி(13) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI Women India Movement protest
SDPI Women India Movement protest

By

Published : Dec 1, 2020, 8:33 PM IST

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் 13 வயது கொண்ட சிறுமி சில நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் காவல் அலுவலர், அரசியல் பிரமுகர், பத்திரிகையாளர் என பலர் கைது செய்யப்படுவதால் இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பினர் இன்று (டிச.1) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details