ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 5ஆம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐயினர் போராட்டம் - jammu and kashmir
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசை எதிர்த்து பல்வேறு பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாட்டில் கடலூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், மத்திய அரசு அலுவலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.